ௐ நமச்சிவாய! ௐ நமச்சிவாய! ௐ நமச்சிவாய!
அருள்மிகு ஸ்ரீ ஞான வேங்கியம்மன் உடனாகிய அருள்மிகு ஸ்ரீ ஆதிபரமேஸ்வரர்
ஆலயம்
78, வேட்டவலம் ரோடு, திருவண்ணாமலை 606601.
பொருள்: ராஜா கோபுரம் மற்றும் மகா மண்டப திருப்பணி
பேரன்புடையீர் வணக்கம்,
நினைத்தாலே முக்தி தரும் பஞ்ச பூத ஸ்தலங்களில் ஒன்றான அக்கினி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை மாநகரின் மைய்யப்பகுதியில் மேற்கண்ட முகவரியில் அமைந்து இருப்பது தான் இந்த பிரசித்த பெற்ற அருள்மிகு ஸ்ரீ ஞான வேங்கியம்மன் உடனாகிய அருள்மிகு ஸ்ரீ ஆதி பரமேஸ்வரர் ஆலயம் இத்திருக்கோவில் மக்களை ஈர்க்கும் மகா சக்திக்கும் மகிமைக்கும் முக்கிய காரணமாக விளங்குவது இத்திருக்கோவில் ஒரு சுயம்புவாக உருவானது தான் இதன் சிறப்பு ஆகும் இது கதையல்ல நிஜம் இனி இத்திருக்கோவில் இந்த புண்ணிய ஸ்தலத்தில் எப்படி உருவானது என்பதை பார்ப்போம் திருவண்ணாமலை மாநகரில் அக்னி ஸ்வரூபமாக விளங்கும் தெய்வமாக உள்ள ஸ்ரீ உண்ணாமலை அம்மன் உடனாகியா ஸ்ரீ அண்ணாமலையாரின் தீவிர சிவதொண்டனாக தொண்டு செய்து சுமார் 88 ஆண்டு காலம் பதினாறு செல்வங்களையும் பெற்று மனைவி மக்களுடன் குடும்ப சமேதராய் சீரும் சிறப்புமாய் வாழ்ந்து அந்த சிவனுக்கே சிறப்பு தினமான பௌர்ணமி நன்னாளில் சிவபதம் அடைந்த கொத்தனார் தொழில் புரிந்த சிவனடியார் த. சின்ன சாமி உடையார் வாழ்ந்த இல்லம் தான் தற்போது மிக ப்ரசித்திபெற்று விளங்கும் அருள்மிகு ஸ்ரீ ஞான வேங்கியம்மன் உடனாகிய அருள்மிகு ஸ்ரீ ஆதிபரமேஸ்வரர் ஆலயம் அமைந்த இந்த புண்ணிய ஸ்தலமாகும். சிவபக்தர் த. சின்ன சாமி உடையார் சிவபதம் அடைந்த பின் அவர் வாழ்ந்த இல்லத்தில் அவருடைய வாரிசுகள் முதல் தலம் இரண்டாம் தலம் ஆகியவற்றில் ஆறு குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள் ஒரு சில ஆண்டுகள் கழித்து அவ்வீட்டின் கழிவு நீர் தேங்கும் இடத்தில் ஒரு வேப்ப மரம் வளர்ந்து வந்தது ஒரு பௌர்ணமி நன்னாளில் சிவனும் சக்தியுமாக சிவனடியார் த. சின்ன சாமி உடையாரின் குடும்ப மக்களுக்கு காட்சி கொடுத்து அவர்கள் அனைவரையும் ஆட்கொண்டதுதான் இத்திருத்தலத்தில் நிகழ்ந்த முதல் தெய்வ செயல் ஆகும். பின்பு சில காலம் அவ்வேப்ப மரத்திற்கு நித்திய பூஜை செய்து வரும் சமயத்தில் அம்மன் அருள் வாக்கு படி பொது மக்கள் ஆதரவோடு முழு முதற்கடவுள் ஸ்ரீ விநாயகருக்கும் அம்மனுக்கும் தனித்தனி கோவில் அமைத்து 2006 ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் இனிதே நடந்தது. அன்று முதல் பொது மக்கள் ஆதரவோடு நித்திய பூஜைகள் அனைத்தும் சிறப்பாக நடந்துக்கொண்டிருந்தது ஒவ்வொரு ஆண்டும் சுவாமிக்கும் அம்மனுக்கும் திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடந்து வரும் காலத்தில் 2012 ஆம் வருடம் இத்திருத்தலத்தில் சிவ சக்தி குடும்பமாய் கோவில்கள் அமைய வேண்டும் என அம்மனின் அருள்வாக்குப்படி இங்கு குடியிருந்த ஆறு குடும்ப மக்கள் அனைவரும் சுமார் 6510 ச அடி உள்ள இரண்டு அடுக்கு மாடி வீட்டை காலி செய்து 1.6.2012 அன்று ஆன்மீக அன்பர்கள் ஆதரவோடு சிவ சக்தி குடும்பமாக கோவில் அமைய பூமி பூஜையும் இனிதே நடந்தது. பின்பு இப்புண்ணிய பூமியில் ஆன்மீக அன்பர்கள் ஆதரவோடு சிவ சக்தி குடும்பமாக உள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஸ்ரீ ஆதி பரமேஸ்வரர் ஸ்ரீ சண்டிகேஸ்வரர் ஸ்ரீ ஞானவேங்கியம்மன் ஸ்ரீ பால முருகன் ஸ்ரீ ஐயப்பன் ஸ்ரீ விஷ்ணு துர்கை சப்த மாதர்கள் மற்றும் நவ கிரக சன்னதி என அனைத்து தெய்வங்களுக்கும் தனி தனி கருவறைகள் கட்டி மிக பிரம்மாண்டமான திருக்கோவிலாக அமைந்து அதற்கு ஸ்ரீ ஞானவேங்கியம்மன் உடனாகிய ஸ்ரீ ஆதி பரமேஸ்வரர் ஆலயம் என்ற பெயரில் 10.2.2014 அன்று ஆன்மீக அன்பர்கள் ஆதரவோடு மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடந்தேறியது. பின்பு இத்திருக்கோவிலுக்கு 55 அடி உயரம் கொண்ட ஐந்து நிலை ராஜ கோபுரம் அமைக்க 2015 ஆம் ஆண்டு பூமி பூஜையும் இனிதே நடந்தது. தற்போது ராஜகோபுரம் திருப்பணி மற்றும் மகா மண்டப திருப்பணிகள் அனைத்தும் நடந்துக்கொண்டிருக்கின்றன. ஆதனால் ஆன்மீக அன்பர்கள் அனைவரும் தங்களால் இயன்ற பொருள் உதவி அளித்து இத்திருப்பணியில் கலந்து கொண்டு தெய்வ அருள் பெற்று சீரும் சிறப்புமாய் வாழ வேண்டி கேட்டுக்கொள்கிறோம்
"கோபுர தரிசனம் கோடி புண்ணியம்"